ரணிலின் அதிரடி உத்தரவு – முப்படையினருக்கு விடுக்கப்பட்ட அவசரமாக அழைப்பு
நாட்டிலுள்ள சகல மாவட்டங்கள் மற்றும் அதனை சூழவுள்ள கடல் எல்லைகளின் பாதுகாப்பிற்காக முப்படையினரையும் அழைக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பொன்றை ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியின் மூலம் இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினர் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு சட்டம்
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் சிறிலங்கா அதிபர் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை