அரச பண மோசடி விவகாரம் – கைதான அமைச்சருக்கு பிணை

அரச பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதான அமைச்சருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சிறிலங்கா அதிபர் தேர்தலில் அரச நிதியைக் கொண்டு நீர்க் குழாய்களைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சரின் வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுகோரலை ஏற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பினை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை

அரச பண மோசடி விவகாரம் - கைதான அமைச்சருக்கு பிணை | Srilanka Election Crime Keheliya Rambukwella Jamin

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் மீதான விசாரணையின் போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை குறித்த மூவருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்