அங்கஜன் எம்.பிக்கு சுதந்திரக் கட்சியில் புதிய உயரிய பதவி.

சாவகச்சேரி நிருபர்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

21/11 திங்கட்கிழமை சுதந்திரகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற போதே குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுடன்- விஜயலால் டிசில்வா மற்றும் பைசர் முஸ்தப்பா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை வரலாற்றில் இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.