வீதியில் குறுக்கிட்ட நாய் : பொலிஸ் கான்ஸ்டபிள் பலி : மற்றுமொருவர் படுகாயம்

பாணமுர – எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கு குறுக்காக  நாய் ஒன்று ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

திங்கட்கிழமை இரவு சோதனையின் பின்னர் பனமுர பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று பல மோட்டார் சைக்கிள்களில் பொலிஸ் நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது பொலீஸ் அதிகாரி ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்கு குறுக்காக நாய் ஒன்று ஓடியது. மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பனாமுர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான கான்ஸ்டபிள் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்