இ.தொ.காவின் போசகரும், முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கம் மறைவுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகரும் முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கம் காலமான செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். அன்னார் 1943.07.20 ஆம் திகதியன்று உடப்புசல்லாவ ரப்பானை தோட்டத்தில் பிறந்து, ஆரம்பக் கல்வியை உடபுசல்லாவ வித்தியாலயத்திலும் பின்னர் உயர் கல்வியை நுவரெலியா புனித கிறிஸ்தவ கல்லூரியிலும் பயின்றார்.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் கொள்கையை ஏற்று 1962 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி தலவாக்கலையில் தன்னை இ.தொ.காவுடன் இணைத்துக் கொண்டார்.

மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுடன் கைகோர்த்து இ.தொ.காவை வெற்றிப் பாதையில் செல்ல வழிகாட்டி உள்ளார். இந்நாட்டின் வளர்ச்சிக்காக பல அமைச்சுப் பதவிகளை வகித்து பாரிய சேவைகளையும் முன்னெடுத்துள்ளார்.

எனது அரசியல் பிரவேசத்தின் போது அவரது அனுபவங்களின் ஊடாக பல அரசியல் பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளார். அவருடைய இழப்பு இ.தொ.காவுக்கு மாத்திரமல்லாது முழு மலையகத்துக்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவருடைய இழப்பால் துயருறும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.