திடீர் தீ விபத்தில் லயன் குடியிருப்பு சேதம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டத்தின் அப்பர்கிரான்லி பிரிவிலுள்ள தோட்ட லயன் தொடர் குடியிருப்பொன்றில்  நேற்று மாலை (22) ஏற்பட்ட திடீர்  தீ விபத்தில் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்தத் தீ விபத்தில் குடியிருப்பிலிருந்த  அனைத்துப் பொருட்களும் முற்றாக எரிந்து நாசமாகின.  இத் தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், குறித்த குடியிருப்பில்  வசித்த 8 பேர் தற்போது அத் தோட்டத்திலுள்ள பொது வாசிகசாலை கட்டிடத்தில்   தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்  தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.