முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு! படையினர் அச்சுறுத்தல் (படங்கள்)

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு ஏற்பாட்டு குழுவினால் நேற்று (23) சிறப்பாக முன்கெடுக்பப்ட்டுள்ளது.

முன்னதாக முள்ளியவளை முதன்மை வீதியில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்னால் இருந்து மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு சிறப்பாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் பொதுச்சுடரினை முன்னால் போராளி அச்சுதன் அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களால் சுடர் ஏற்றி மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டுள்ளது.

இதன்போது 150 வரையான மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.

 

படையினரால் அச்சுறுத்தல்

முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு! படையினர் அச்சுறுத்தல் (படங்கள்) | Maaveerar Naal 2022 In Mullaitivu

மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பதற்காக அழைத்து வரப்பட்ட போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள படைமுகாமில் இருந்து படையினர் காணொளி எடுத்து அச்சுறுத்தல் விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.