கோட்டாபய விரட்டியடிக்கப்பட்டது இதனாலேயே – ஹிட்லராகமாறிய ரணிலுக்கு ஹெக்டர் அபாய மணி!

இலங்கை போன்ற நாட்டில் ஹிட்லர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெறும் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இராணுவத்தில் இருக்கும் தொழிலாளிகளின் பிள்ளைகளின் கைகளில் துப்பாக்கிகளை கொடுத்து பட்டினியில் இருக்கும் மக்களின் தலையில் வைக்குமாறு கூறுவது நியாயமானதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இராணுவத்தால் மக்களை அடக்கப்போவதாக கூறும் ரணில்

கோட்டாபய விரட்டியடிக்கப்பட்டது இதனாலேயே - ஹிட்லராகமாறிய ரணிலுக்கு ஹெக்டர் அபாய மணி! | Sri Lanka Hitler Sjb Parliament Mp Gotabaya Ranil

 

சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தில் பயங்கரமான கருத்தை வெளியிட்டார். மக்கள் உரிமைகளை கோரி வீதியில் இறங்கினால், அவசர காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இராணுவத்தை கொண்டு அடக்க போவதாக கூறினார்.

அவரின் இந்த கருத்து முழு நாட்டு மக்களுக்கு செய்த அவமதிப்பு. இப்படியான கருத்தை வெளியிட்டிருக்கக்கூடாது என்பது எனது உணர்வு.

துரத்தப்பட்ட கோட்டாபய

கோட்டாபய விரட்டியடிக்கப்பட்டது இதனாலேயே - ஹிட்லராகமாறிய ரணிலுக்கு ஹெக்டர் அபாய மணி! | Sri Lanka Hitler Sjb Parliament Mp Gotabaya Ranil

 

மக்கள் வந்ததுடன் ஹிட்லர்களுக்கு இலங்கை போன்ற நாடுகளில் வாய்ப்பு கிடைக்காது. மக்களுக்கு இருந்த பிரச்சினைகள் காரணமாகவே கோட்டாபய ராஜபக்ச துரத்தியடிக்கப்பட்டார் எனவும் ஹெக்டர் ஹப்புஹாமி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.