அவசர செய்தியாளர் சந்திப்பிற்குத் தயாராகும் சிறிலங்கா அமைச்சர்கள் – வெளியிடப்படவுள்ள பல தகவல்கள்!

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று அவசர செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பு பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. அதில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்ட அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பி்ல் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவும் கலந்துகொள்ள உள்ளார்.

கட்சியை கைப்பற்றும் சந்திரிகாவின் முயற்சி

அவசர செய்தியாளர் சந்திப்பிற்குத் தயாராகும் சிறிலங்கா அமைச்சர்கள் - வெளியிடப்படவுள்ள பல தகவல்கள்! | Sri Lanka Cabinet Ministers Press Meet Budget Mp

சிறிலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பாகவும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருவது பற்றியும் எதிர்கால அரசியல் விடயங்கள் குறித்து பல்வேறு தகவல்களை இவர்கள் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்த கட்சி தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியது.

இவர்கள் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

கட்சியின் தீர்மானத்தை மீறி ஆதரவு

அவசர செய்தியாளர் சந்திப்பிற்குத் தயாராகும் சிறிலங்கா அமைச்சர்கள் - வெளியிடப்படவுள்ள பல தகவல்கள்! | Sri Lanka Cabinet Ministers Press Meet Budget Mp

 

இவ்வாறான நிலையில், சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தை மீறி, வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நேரிடும் என கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.