சிகிச்சை நிலையத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த விஷப் பாம்புகள்! இறுதியில் எடுத்த முடிவு

பதுளை கெப்பிட்டிபொல பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மிகப் பெரிய நாக பாம்பு மற்றும் 25 நாக பாம்பு குட்டிகள் எவ்வித பாதிப்பும் இன்றி பிடித்து காட்டில் விட்டுள்ளார்.

கெப்பிட்டிபொல நகரில் உள்ள ஆரம்ப வைத்திய சிகிச்சைப்பிரிவின் கட்டடத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் இருந்து நாக பாம்பு குட்டிகள் வெளியில் வருவதை அந்த வைத்திய பிரிவின் ஊழியர்கள் மற்றும் சிகிச்சை பெற வருவோர் பல முறை கண்டுள்ளனர்.

இது ஆபத்தான நிலைமை என்பதால், அது பற்றி வைத்திய பிரிவின் ஊழியர்கள், பாம்புகளை பிடித்து காட்டில் விடும் இளைஞர் ஒருவருக்கு அறிவித்துள்ளனர்.

 

பாம்பு பிடிக்கும் இளைஞன்

சிகிச்சை நிலையத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த விஷப் பாம்புகள்! இறுதியில் எடுத்த முடிவு | Snake Hunter Sri Lanka Hospital 25 Cobras

எட்டம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான சுப்புன் லக்ஷ்சான் என்ற இந்த இளைஞர், பாம்புகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி அவற்றை பிடித்து காட்டி விடுவதை நீண்டகாலமாக செய்து வருவதாக கூறப்படுகிறது.

அறிவிப்புக்கு அமைய கெப்பிட்டிபொல நகரில் உள்ள வைத்திய சிகிச்சைப்பிரிவுக்கு சென்ற இளைஞன், பிரதேசவாசிகளின் உதவியுடன் மரம் அமைந்திருந்த இடத்தை தோண்டியுள்ளதுடன் தோண்டிய குழிக்குள் இருந்த பெரிய நாக பாம்பு மற்றும் 25 குட்டிகளை பாதுகாப்பாக பிடித்து காட்டில் கொண்டு விட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.