பிரபல வைத்தியசாலையில் அம்பலமான மோசடி..! பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோசடி சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் குடும்பங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து சிறுநீரகங்களை பணத்திற்கு வாங்கி வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுநீரகக் கடத்தலின் பிரதான தரகராக மோதரை காஜிமாவத்தையைச் சேர்ந்த ஒருவரெனவும் தெரிய வந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்