பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கான செஸ் வரியை நீக்குவது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்