பசிலை வரவேற்க சென்றவர்கள் சாப்பிட்ட பில் 60,000 ரூபா ! செலுத்தியது சிவில் விமான சேவைகள் அதிகார சபை !

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டுநாயக்கவிற்கு விஜயம் செய்த போது, ​​வி.ஐ.பி டெர்மினல் முனையத்தில் சேவைகளை வழங்குவதற்காக செலுத்த வேண்டிய 60,000 ரூபா தொகையை சிவில் விமான சேவைகள் அதிகார சபை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இந்த சேவை வழங்கப்பட்டாலும் கடந்த வியாழன் அன்று கொடுப்பனவு செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து வருகை தந்த பின்னர் அவரை வரவேற்க வி.ஐ.பி டெர்மினலுக்கு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 100இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டிகளுக்காக இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்