இனப்பிரச்சினை தீர்வு பேச்சுக்கு முன் தமிழ் கட்சிகள் சந்திப்பு – எட்டப்பட்ட இணக்கப்பாடு

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பின்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், கொழும்பில் உள்ள அவரது வீட்டில் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (25) மாலை இடம்பெற்றது.

இனப்பிரச்சினை தீர்வு பேச்சுக்கு முன் தமிழ் கட்சிகள் சந்திப்பு - எட்டப்பட்ட இணக்கப்பாடு | Meeting Tamil Parties Ethnic Problem Talks Ranil

 

இதன்போது, தமிழ் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும், மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டும் மற்றும் தமிழ் மக்களுக்கான அதிகாரப்பரவலை வழங்க வேண்டும் போன்ற விடயங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்துவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட ஏனைய தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஐ.பி.சி. தமிழுக்கு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.