13 ஆவது திருத்தம் தொடர்பில் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம்!

இலங்கையில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா. உள்ளிட்ட பொதுவெளியில் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

இவ்வாறான நிலையில், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

 

“2018 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டம் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதுள்ளது.

மாகாணங்களுக்கு புதிய எல்லை நிர்ணயம்

13 ஆவது திருத்தம் தொடர்பில் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம்! | Sri Lanka 13Th Amendment Government Sabry India Sl

 

மாகாணங்களுக்கு புதிய எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் அதற்கு சில சட்டத் தடைகள் இருப்பதால் அது நடைபெறவில்லை.

எவ்வாறாயினும் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதோடு அவர்களிடமுள்ள அதிகாரங்கள் அவர்களுக்கு திருப்ப வழங்கப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.