இலங்கையில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க யுனிசெப் வெளியிட்ட புதிய அறிக்கை

கடந்த 80 ஆண்டுகளை போன்றல்லாது, 2022-இல் சிறுவர் நலன்சார் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என யுனிசெப்(UNICEF) அறிக்ககையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான நெருக்கடியை தவிர்ப்பதற்கு பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் இடங்கள் மற்றும் அது குறித்து பெற்றுக்கொள்ளக்கூடிய சேவை தொடர்பிலான தரவுகள் முறையாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் “இந்த பொறிமுறை சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான திட்டமிடலையும் விரிவாக்கங்களையும் மேம்படுத்துவதற்கு உதவியாக அமையும்.

புதிய சட்டம்

இலங்கையில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க யுனிசெப் வெளியிட்ட புதிய அறிக்கை | Child Protection Improve Unicef Planning

புதிய சட்டத்தில் சிறுவர்களுக்கான பாதுகாப்பும் வலுபடுத்தப்பட வேண்டும். அத்தோடு குடும்பங்களை வலுவூட்டுவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இதனூடாக குழந்தைகளை தடுத்து வைத்தல், வேலைக்கமர்த்தலை முற்றாக நிறுத்த முடியும்

உறுதியான சமூக சேவை, நீதிக்கான சமூகப் பணி ஆகியவை சிறுவர்களை இலங்கையில் பாதுகாப்பதற்கான சிறந்த பொறிமுறையாக இது காணப்படும்.

பொருளாதாரம், பொது நிதி மறுசீரமைப்பு

இலங்கையில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க யுனிசெப் வெளியிட்ட புதிய அறிக்கை | Child Protection Improve Unicef Planning

சிறுவர் அடிமைத்தனத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்காக சமூக சேவை, நீதிக்கான பணியாளர்களின் அபிவிருத்தி, திட்டமிடலுக்கு அரசாங்கம் முன்னுரிமையளிக்க ​வேண்டும்.

இந்த பணிகளுக்கான பயிற்சி, மேற்பார்வைக்காக அரசாங்கத்தின் முதலீடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சுகள், திணைக்களங்கள், பொலிஸ், நீதித்துறை ஆகியன பெண்கள் – சிறுவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கான பொறிமுறையை அமைப்பதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டள்ளது.

பொருளாதாரம், பொது நிதி மறுசீரமைப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து செல்லும்போது, குழந்தை நலன், நீதிச் சேவைகள் பாதுகாக்கப்படுவதும், குறைந்தபட்ச நிதி மூலங்களை ஒதுக்கீடு செய்வதும் முக்கியமானது” என யுனிசெப்-இன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.