சாவகச்சேரியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு அடையாளம் காணப்பட்டது.

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் 23/11 புதன்கிழமை பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏ9 வீதி ஓரம் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்தே குறித்த கைக்குண்டு அடையாளம் காணப்பட்ட நிலையில் காணி உரிமையாளரால் இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு, பொலிஸார் கைக்குண்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்