சந்நிதியான் ஆச்சிரமத்தால் மன்னாரில் உலர் உணவுப்பொருட்கள்.

சாவகச்சேரி நிருபர்
சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடந்த 22/11 செவ்வாய்க்கிழமை மன்னார் பெரியமுறிப்பு கிராமத்தில் உள்ள தேவைப்பாடுடைய 95குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை உள்ளடக்கிய கூலித் தொழிலாளர்களுடைய குடும்பங்களுக்கே இவ்வாறு 450,000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.குறித்த உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரமத்தைச் சேர்ந்த மோகனதாஸ் சுவாமிகள்,சமூக செயற்பாட்டாளர்களான இ.தயாபரன்,அந்தோனி ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்