கடன் அடிப்படையில் எரிபொருள் கொள்கலன்கள் விநியோகம்! விடுக்கப்பட்ட அறிவித்தல்

எதிர்வரும் காலங்களில் வரும் பண்டிகைகளை முன்னிட்டு, 34,000 மெற்றிக்தொன் சமையல் எரிவாயு முன்பதிவு செய்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன் ஒரு தொகுதி எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாகவும், ஜனவரி வரை பல கப்பல்கள் நாட்டை வந்தடையுமெனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை, 4000 மெற்றிக்தொன் எரிவாயுவை ஏற்றிய இரு கப்பல்கள் எதிர்வரும் 30ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

கொள்கலன்களுக்கு கடும் தட்டுப்பாடு

கடன் அடிப்படையில் எரிபொருள் கொள்கலன்கள் விநியோகம்! விடுக்கப்பட்ட அறிவித்தல் | Special Announcement By Litro Gas Price

மேலும், பல எரிவாயுக் கப்பல்கள் நாட்டை வந்தடைந்ததும் அதனை கப்பலிலிருந்து இறக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்த உடன் வழமைபோன்று சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை வரை சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் எரிவாயு கொள்கலன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் கொள்கலன்களை வழங்குமாறு லிட்ரோ நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்