தூதரக சேவைகளை வெளிவிவகார அமைச்சு விரிவுபடுத்துகிறது

வெளிவிவகார அமைச்சு பொதுமக்களுக்கு திறமையான சேவையை வழங்குவதற்காக அமைச்சின் தூதரக சேவைகளை பரவலாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

இதன்படி, தற்போதுள்ள பிராந்திய அலுவலகங்களுக்கு மேலதிகமாக, முக்கிய நகரங்களுக்கு சேவையை மேலும் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் இது 2023 செயற்த் திட்டத்தின் படி செயற்படுத்தப்பவுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவின் பணிப்பாளர் பிரிகயாங்கிகா இதனை விஜயகுணசேகர தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில், அமைச்சின் தூதரக சேவையை பொது மக்களுக்கு மிகவும் நட்புறவான சேவையாக மாற்றும் நோக்கில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஒவ்வொரு அமைச்சின் செயற்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக வெகுஜன ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதிகளவானோர் வெளிநாடு செல்ல முயல்வதால், வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைகளைப் பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆவணச் சரிபார்ப்புக்காக நாளாந்தம் 1,000க்கும் மேற்பட்டோர் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது மின்னணு முறையின் மூலம் இந்த விவகாரங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், சான்றிதழ் சரிபார்ப்பு, இறப்புகள், விபத்துகளுக்கான இழப்பீடு, வெளிநாடுகளில் ஊதியம் வழங்காதது போன்றவற்றையும் தூதரகப் பிரிவினரே செய்து வருவதாகவும், இதற்காக அவர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.