பால்மாவின் விலை சடுதியாக அதிகரித்தது!!

உள்ளூர் பால்மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதன்படி 450 கிராம் நிறையுடைய உள்ளூர் பால்மா பொதியின் விலை 175 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பால்மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

975 ரூபாவாக இருந்த 450 கிராம் உள்ளூர் பால் மா பொதியின் புதிய விலை 1150 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் லிட்ரோ எரிவாயுவின் விலை ரூபா 200 ஆல் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.