2023ஆம் ஆண்டின்  இலங்கை இருளில் சூளும் வாய்ப்பு!!

2023ஆம் ஆண்டின் ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் இலங்கையை இருள் சூளும் வாய்ப்பிருப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு எதிர்கொள்ள நேரிடும் என கூறியுள்ளார்.

 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2022 செப்டம்பரிலிருந்து இந்த ஆண்டுக்கான மீதமுள்ள காலப்பகுதியிலும், 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையிலும் மின் உற்பத்திக்குத் தேவையான 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியுடன் 38 கப்பல்கள் வர வேண்டும்.

எனினும் இதுவரை 4 கப்பல்கள் மட்டுமே வந்துள்ளன. ஐந்தாவது கப்பல் துறைமுகத்தில் உள்ள சில பிரச்சினைகள் காரணமாக வரத் தாமதமாகும்.

இந்த 38 கப்பல்களும் ஏப்ரல் 15ஆம் திகதிக்குள் கிடைக்காவிட்டால் ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் பெரிய அளவில் மின்வெட்டு ஏற்படும்.

வரலாற்றில் முதல் தடவை மிகப்பெரிய மின்தடையாக இது இருக்கும். அதனால் தான் 2023இல் ஒரு இருட்டு ஜூலை வரலாம் என்று சொல்கிறோம்.

 வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டு..! 2023இல் காத்திருக்கும் பேரிடி | Powecut Scedule Sri Lanka Dark July 2023 Shortage

லக்விஜய மின் உற்பத்தி நிலையம் நாட்டின் மின்சாரத் தேவையில் 45%ஐ வழங்குகிறது. இப்போது நிலக்கரி கிடைக்கவில்லை என்றால், ஏனைய அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெற்றால் செலவு மிக அதிகமாக இருக்கும்.

இலங்கை மின்சார சபை என்ற வகையில் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என  நம்புகிறோம்

இல்லையெனில், பெரிய அளவில் மின்வெட்டு ஏற்படும். எந்த வகையிலும் அவசர மின்சாரத்தை வாங்குவதன் மூலம் அந்த மின்வெட்டை செய்ய முடியாது” என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.