இலங்கை போக்குவரத்து சேவையில் புதிய நடைமுறை..! வெளியாகியுள்ள அறிவித்தல்

பொதுப் போக்குவரத்து பேருந்து வண்டிகளுக்காக டிஜிட்டல் அட்டை ஒன்றை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்து சேவைகள் மற்றும் ரயில் சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் துறைக்காக மாறுபடாத தேசியக் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்கள்

 

இலங்கை போக்குவரத்து சேவையில் புதிய நடைமுறை..! வெளியாகியுள்ள அறிவித்தல் | New Procedure In Sri Lanka Transport Service

வெளிவிவகார அமைச்சு, போக்குவரத்து மற்றும் பெருந் தெருக்கள் அமைச்சு, ஊடக அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.