2021 க.பொ.த சா/த பரீட்சையில் யாழ். கல்வி வலயம் சாதனை!

அண்மையில் வெளியான 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயத்தைச் சேர்ந்த 193 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்றதன் மூலம் யாழ். கல்வி வலயம் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளது.


இதன்படி தீவக கல்வி வலயத்தில் ஒரு மாணவனும் கிளிநொச்சி கல்வி வலயத்தில் 49 மாணவர்களும் மன்னார் கல்வி வலயத்தில் 39 மாணவர்களும் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 47 மாணவர்களும் தென்மராட்சி கல்வி வலயத்தில் 36 மாணவர்களும் துணுக்காய் கல்வி வலயத்தில் 09 மாணவர்களும் வடமராட்சி கல்வி வலயத்தில் 56 மாணவர்களும் வலிகாமம் கல்வி வலயத்தில் 53 மாணவர்களும் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 12 மாணவர்களும் வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 56 மாணவர்களும் அடங்கலாக வடக்கு மாகாணத்தில் 553 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்