ஒரு மாதத்திற்கு மட்டுமே சேலைன் கையிருப்பு

636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் இலங்கையில் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சாதாரண சேலைன் கூட ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே இருப்பதாகவும் சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு சேலைன் இருப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.