புத்தளத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த மக்கள் (Photos)

புத்தளம் பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் மாத்திரம் இன்று காலை முதல் பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது QR குறியீட்டின் மூலம் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெட்ரோலை பெற நீண்ட காலத்திற்கு பின்னர் இன்று மோட்டார் சைக்கிள்களிலும், முச்சக்கர வண்டிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

 

யாழ்ப்பாணம்

இதேவேளை யாழ்ப்பாணத்தில் சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் இன்று மக்கள் எரிபொருளை பெறுவதற்கு வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று முதல் சுழற்சி முறையில் மண்ணெண்ணெய் விநியோகிப்படவுள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் இன்று மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்ட நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 23 முதல் 27 வரை கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு 229 மண்ணெண்ணெய் பௌசர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இம்மாதம் முதலாம் திகதி முதல் 19ஆம் திகதி வரை தினமும் 29 பௌசர்கள் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.

இதன்படி, புதிய வேலைத்திட்டத்தின் கீழ் கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நாளாந்தம் வழங்கப்படும் மண்ணெண்ணெய் பௌசர்களின் எண்ணிக்கை சுமார் 45 ஆக அதிகரித்துள்ளதாகவும் இது 17 வீத அதிகரிப்பாகும் எனவும் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.