ஹெரோயின் போதை பொருளுடன் பிரதமர் பாதுகாப்பு பிரிவு காவல்துறை உத்தியோகஸ்தகர் கைது..!

பிரதமர் பாதுகாப்பு பிரிவின் காவல்துறை உத்தியோகஸ்தகர் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமை காவல் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சந்தேக நபர் கண்டி பொது சந்தைக்கு அருகில் மோசடி தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இந்த காவல்துறை உத்தியோகஸ்தர் இலங்கை- ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொண்டுள்ள இலங்கை அணியின் வீரர்கள் தங்கியிருக்கும் விடுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகஸ்தர் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவராக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கண்டி தலைமை காவல் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே காவல்துறை திணைக்களத்தில் கடமையாற்றும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

புதிய காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மத்தியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

கொழும்பு பொரள்ளை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரும் அண்மையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த காவல்துறை உத்தியோகஸ்தகர், போதைப் பொருளை பாவிக்கும் நபர்களுடன் இணைந்து கொள்ளையடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.