வெளிவிவகார அமைச்சரின் அமெரிக்க நகர்வு – கொழும்பில் கூட்டமைப்பு திடீர் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவில் சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் நிலையில் கொழும்பில் அமெரிக்க தூதர் யூலி சங்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு சந்திப்பொன்றை நடத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு தரப்பில் இரா.சாணக்கியன், சிவஞானம் சிறிதரன், கோவிந்தம் கருணாகரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.

 

அமெரிக்காவில் அமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சகத்தின் மூன்று உயர் அதிகாரிகள் மற்றும் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதர் மகிந்த சமரசிங்கவுடன் இணைந்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்கன் உட்பட்ட முகங்களை சந்திக்கும் நிகழ்ச்சி நிரல்களை கொண்டுள்ள நிலையில் கொழும்பில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

 

 

இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம்  தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.