நைஜீரியாவில் கப்பலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நைஜீரிய கடல் சூழலுக்குள் 2022 ஓகஸ்ட்டில் நுழைந்ததற்காக நைஜீரிய அதிகாரிகளால் நைஜீரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த கப்பலில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார்

நைஜீரியாவில் கப்பலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Information On Sri Lankan Crew Members Detained

கென்யாவிலுள்ள சிறிலங்கா உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன், இந்தியா, போலந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் குறித்த கப்பல் பணியாளர்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நைஜீரிய கடற்படை போதிய பாதுகாப்பு, உணவு, மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் போன்ற அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

கப்பல் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை

நைஜீரியாவில் கப்பலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Information On Sri Lankan Crew Members Detained

இந்த நிலையில் குறித்த கப்பல் தொடர்பான அடுத்த விசாரணை 2023 ஜனவரி 11ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.