கிராம சேவகர் என கூறி பெண்ணிடம் வழிப்பறி! யாழில் சம்பவம்

கிராம சேவகர் என தன்னை போலியாக அடையாளப்படுத்திய நபர் வயோதிப பெண் ஒருவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார்.

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு கோண்டாவில் மேற்கிலுள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டு இருந்த 75 வயதான வயோதிப பெண்ணிடம் உந்துருளியில் வருகை தந்த நபர் தன்னை கிராமஅலுவலகர் என போலியாக அடையாளப்படுத்தியுள்ளார்.

 

2 பவுண் தங்க சங்கிலி

கிராம சேவகர் என கூறி பெண்ணிடம் வழிப்பறி! யாழில் சம்பவம் | Police Investigating Srilanka Jaffna

உங்களுக்கு 70 ஆயிரம் ரூபா உதவித்தொகை வந்துள்ளது. உடனடியாக என்னுடன் வாருங்கள் என்று தெரிவித்து அவர் அழைத்துள்ளார்.

அதை உண்மையென்று நம்பி அந்த அந்த வயோதிப பெண் சென்ற நிலையில், நந்தாவில் கோவில் பகுதியில் யாருமற்ற தனிமையை சாதமாக பயன்படுத்தி மேற்படி வயோதிப பெண் அணிந்திருந்த 2 பவுண் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார்.

இது தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.