நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 நாள் அரசவை லண்டனில் ஆரம்பம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது நாடாளுமன்றத்தின் எட்டாவது அமர்வு இன்று பகல் பிரித்தானிய தலைநகர் லண்டனில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

3 நாள் அரசவை

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 நாள் அரசவை லண்டனில் ஆரம்பம் | Government Tamil Eelams Parliament Sitting London

 

தமிழீழத்தின் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வெளியுறவுக் கொள்கை சவால்கள் என்ற கருப்பொருளில் இந்தக் கூட்டத் தொடர் இடம்பெற்று வருகிறது.

தமிழர் தாயகத்தில் 2009 இல் முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று தனது இன்னொரு அரசவை அமர்வை லண்டனில் ஆரம்பித்துள்ளது.

இன்றைய ஆரம்ப அமர்வில் அதன் பிரமுகர்கள் பங்கெடுத்துள்ளனர்.

உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யபட்ட அரசாங்கமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதப்படுகிறது.

நாளை வெஸ்ற்மினிஸ்ரர் அரங்கில் அமர்வு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 நாள் அரசவை லண்டனில் ஆரம்பம் | Government Tamil Eelams Parliament Sitting London

 

பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையை கொண்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கென ஒரு அமைச்சரவையும் உள்ளது. 132 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கட்டமைப்பில் உள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை சர்வதேச சமூகம் கையாளவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுப்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை மாலை ஆறுமணிக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள வெஸ்மினிஸ்டர் மண்டபத்தில் இடம்பெறவுள்ள அமர்வில் கிழக்குத் தீமோரைச் சேர்ந்த சர்வதேச பிரமுகர்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கையில் இருந்த சென்றுள்ள அரசியல் தலைவர்கள் உட்பட்ட பலரும் உரையாற்றவுள்ளனர்.

இந்த அமர்வுக்காக புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்ற உறுப்பினர்கள் லண்டனில் ஒன்று கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்