ஹப்புத்தளையில் சுற்றுலாச் சென்ற 20 பேர் மீது குளவி கொட்டு
ஹப்புதளை – தம்பேத்தன்ன – லிப்டன்ஸ் சீட் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த சுமார் 20 பேர் இன்று முற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அவர்கள் ஹப்புத்தளை – பங்கெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 17 பேரும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மூவருமே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 5 வயதுக்கு குறைவான இரு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது
கருத்துக்களேதுமில்லை