16 வயது பள்ளிச் சிறுமி மீது பாலியல் வன்புணர்வு! காணொளியாக பதிவு செய்த சக மாணவர்கள்
மட்டக்களப்பு கொக்குவில் காவல் பிரிவில் உள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒரே தரத்தில் கல்வி கற்று வரும் 16 வயது சிறுமி ஒருவரை காதலன் பாலியல் வன்புணர்வு மேற்கொண்டிருந்த போது அதனை அவனின் நண்பர்கள் ஒளிந்திருந்து காணொளியாக பதிவு செய்து சிறுமியை உடல் உறவுக்கு வருமாறு அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் காதலன் மற்றும் நண்பர்கள் உட்பட 3 பேரை இன்று (4) கைது செய்துள்ளதாக கொக்குவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் 16 வயது சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் காதலன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அவனது வீட்டில் எவரும் இல்லாத போது காதலியை கூட்டிச் சென்று பாலியல் வன்புணர்வு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அதனை அவனின் நண்பர்கள் 3 பேர் ஒளிந்திருந்து காணொளியாக பதிவு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த சிறுமியின் காதலனின் நண்பர்கள் சிறுமியை தொடர்பு கொண்டு நீயும் உனது காதலனும் உடல் உறவு மேற்கொண்ட காணொளி இருப்பதாகவும் நீ எங்களுடன் உடல் உறவு கொள்ள வருமாறும் இல்லாவிடில் காணொளியை சமூக ஊடகங்களில் பரப்பப்போவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் 16 வயது காதலன் மற்றும் அவனது 16 வயதுடைய நண்பர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஒருவர் தலை மறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை