சதொசவின் மாத வருமானம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

நஷ்டத்தில் இயங்கி வந்த லங்கா சதொச நிறுவனம், தேவையான வசதிகளை செய்து கொடுத்து, விநியோகஸ்தர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி 57000 இலட்சம் மாதாந்த வருமானம் பெறும் நிறுவனமாக மாறியுள்ளதாக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும், 4000 பணியாளர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான கிளைகளைக் கொண்டு பெருமளவிலான பொருட்களை நிர்வகிப்பது என்பது இலகுவான காரியம் அல்ல, அனைத்து அதிகாரிகளின் அர்ப்பணிப்பினால் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற முடிந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 

உணவு வரிசை

சதொசவின் மாத வருமானம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Sathosas Monthly Income Is 57000 Lakhs

தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில், நாட்டில் பெரும் சவாலாக இருந்த குறைந்த அளவிலான உணவு, சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டு, உணவு வரிசைகள் உருவாகாமல் தடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விலைகளைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம்

 

இதேவேளை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள், பென்சில்கள் உள்ளிட்ட பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.