வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் அனுப்பும் பணம் தொடர்பில் வெளியான தகவல்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி விதிக்கப்படும் அல்லது பலவந்தமாக இலங்கை ரூபாயாக மாற்றப்படும் என்ற வதந்தி பொய்யானது என இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டுப் பணம் அனுப்புவதற்கு வரி விதிக்கப்படாது, வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி பணத்தை அவர்களது வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டு நாணயங்களில் வைத்திருக்கலாம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் அனுப்பும் பணம் தொடர்பில் வெளியான தகவல் | Foreign Exchange Sent By Sri Lankans Abroad

அல்லது அவர்களின் விருப்பப்படி இலங்கை ரூபாயாக மாற்றிக்கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை எவ்வித மாற்றமும் இன்றி அதே முறையில் தொடர்ந்து அனுபவிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.