முட்டையின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை !!

முட்டையின் விலையை  மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் தேவைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி இல்லை என்றும் இறக்குமதி செய்வதன் மூலம் குறைந்த விலையில் முட்டைகளை விற்பனை செய்ய முடியும் என்றும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளமை தொடர்பில் தெளிப்படுத்தும் போதே அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் சங்கத்தின்  செயலாளர் பீ.ஆர். அழஹகோன் இவ்வாறு குறிப்பிட்டார்.

முட்டையின் விலை 80 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.இது தொடர்பில் எனக்கு தகவல்கள் கிடைக்கவில்லை.

வழமையாக பண்டிகை காலங்களில் முட்டைகளின் விலை அதிகரித்து காணப்படும். ஆனால் பாரியளவில் அதிகரிக்காது. நாட்டில் கேள்விகளுக்கு ஏற்ப முட்டைகள் காணப்படுகின்றன.

மேலும் முட்டைகளுக்கு நிர்ணய விலை காணப்படுகிறது.குறித்த விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும்.

இருப்பினும் நிர்ணய விலை காரணமாக முட்டை உற்பத்தி குறைவடைந்துள்ளது. உற்பத்தியாளர்கள் முட்டைகளைச் சந்தைக்கு விற்பனை செய்வது குறைவடைந்துள்ளது என்றார்.

இந்நிலையில், நாட்டின் தேவைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி இல்லை எனவும் இறக்குமதி செய்வதன் மூலம் குறைந்த விலையில்  முட்டைகளை விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் முட்டைகளுக்கான கேள்வியில் 50 வீதமான முட்டைகள் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றன .இதன் காரணமாக முட்டை மாபியா ஒன்றினை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர். இதன் மூலம் 35 ரூபாவில் இருந்த முட்டையை 80 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு முயற்சிக்கிறார்கள். இது தொடர்பில் நாம் முன்கூட்டியே தெரிவித்திருந்தோம்.

இதனை யாரும் அப்போது கவனத்தில் கொள்ளவில்லை. பண்டிகை காலத்தில் அதிக அளவில் முட்டைகள் தேவையாகும்.

இதன் காரணமாக   முட்டையை கூடிய விலைக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிக்கிறார்கள். முட்டை தட்டுப்பாடு இருக்கின்றமையால் சிலர் முட்டைகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்து சேமித்து வைத்துக் கொள்கிறார்கள். நாட்டில் முட்டை இல்லை என்றால் வெளிநாட்டில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதே இதற்கான தீர்வாகும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.