கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டது…(படங்கள்)

கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்கு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை(5) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி காவல் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி 3ஆம் பிரிவில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் ஆரையம்பதியை பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து பல கோடி பெறுதியான வலம்புரி சங்கு ஒன்று விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்கள் யாவும் காத்தான்குடி காவல்துறையினரால் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்கு..! (படங்கள்) | Valampuri Sangh Worth Crores Sri Lanka

Gallery Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்