சத்ய சாய் நிறுவனத்தால் பார்வையை இழந்த தம்பதியினருக்கு வீடு.

சாவகச்சேரி நிருபர்
இலங்கை ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தினால் வவுனியா-இராஜேந்திரகுளம் கிராமத்தில் உள்ள பார்வையை இழந்த தம்பதியினருக்கு 50இலட்சம் ரூபாய் செலவில் வீடு அமைத்து 04/12 ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலாளரின் வேண்டுகோளிற்கு அமைவாக பார்வையை இழந்த திரு.திருமதி சஞ்சீவன் குடும்பத்திற்கே பகவான் பாபாவின் அருளால் குறித்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
வீடு கையளிப்பு நிகழ்வில் இலங்கை ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தின் தலைவர் திரு.மனோகரன்,வவுனியா மாவட்டச் செயலர்,வவுனியா பிரதேச செயலாளர்,வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் உள்ளிட்டோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்