விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளது..
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவைக்கு பதிலாக அடுத்த இரண்டரை வருடங்களுக்கு நிரந்தர அமைச்சரவையை நியமிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 12 எம்பிக்கள்,ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்பிக்கள், மற்றும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி ஆகியோர் புதிய அமைச்சரவையில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி செயற்படாத அமைச்சுக்களும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் மாற்றப்படவுள்ளன.
நெடுஞ்சாலைகள், விளையாட்டு, சுகாதாரம், போக்குவரத்து, கைத்தொழில், மின்சாரம், வனவிலங்கு, சுற்றுச்சூழல் மற்றும் துறைமுகங்கள் ஆகிய அமைச்சுகளுக்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த அமைச்சுக்களுக்கு கடந்த காலங்களில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் அமைச்சரவையில் இணைய உள்ளனர்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ராஜித சேனாரத்ன , குமார வெல்கம ஆகியோரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து துமிந்த திஸநாயக்காவும் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை