மரம் முறிந்து விழுந்ததில் 55 வயதுடைய நபர் உயிரிழப்பு!
உடப்புஸ்ஸல்லாவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்கடபத்தனை கிராமத்தில் வீடு ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (08) அதிகாலை மரம் ஒன்றின் கிளைகள் வீழ்ந்துள்ள நிலையில் அவ்வீட்டின் ஒரு பகுதி உடைந்து வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததாக உடப்புஸ்சலாவை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் 55 வயதுடைய வீ.கே.ஆரியபால என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் நால்வர் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை அறிந்த கிராமவாசிகள் விரைந்து வீட்டில் சிக்கியிறுந்தவர்களை மீட்டுள்ள நிலையில் சம்பவத்தில் உயிரிழந்த நபர் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உடப்புஸ்ஸல்லாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை