ஆலையடிவேம்பில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் நிவாரண உதவிகள்…

சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டிங்கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கான பொருளாதார நிவாரண உதவிகளை சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் முன்னேடுத்து வருகின்றது.

மேலும் அறப்பணி செயற்திட்டங்களை மற்றும் முன்பள்ளி நிலையங்களையும் முன்னெடுத்து வரும் வேளையில் ஆறுமுக நாவலரின் 200 வது ஆண்டினை முன்னிட்டும், அறப்பணி திட்டத்தின் ஊடாக அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண் தலைமை தாங்கும் 05 குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அதன் ஒரு செயற்பாடாக அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு செயலகத்திற்கு உற்பட்ட பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமை தாங்கும் 05 குடும்பங்களுக்கான பெறுமதியான உலர் உணவுகள் வழங்கிவைக்கப்பட்டன இன் நிகழ்வானது விபுலானந்தா சிறுவர் இல்ல பணிப்பாளர் திரு.தம்பியப்பா கைலாயபிள்ளை தலைமையில் இன்று (07/12/2022) காலை 9.00 மணியளவில் அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் அதிதியாக ஆலையடிவேம்பு இந்து ஸ்வயம் சேவக சங்க இணைப்பாளர் திரு.ஆறுமுகம் சசிந்திரன்,திரு.நா. ரவிந்திரகுமார், ஜீவராஜ், காந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை பெண் தலைமை தாங்கும் 05 குடும்பங்களுக்கு சுமார் 11,000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்