பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானம்!
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் மாற்றமடைந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில், பால்மாவின் விலையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
இந்த விலை மாற்றத்திற்கு அமைய, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க குறித்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இந்தநிலையில், 400 கிராம் பால்மா பக்கெற் ஒன்றின் விலையை 1240 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பால்மா விலை அதிகரிப்பு தொடர்பாக தாம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என உள்ளூர் பால்மா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துக்களேதுமில்லை