போதைப்பொருள் பாவனையினால் 3 வருடங்களில் மரணம் நேரிடலாம்!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் நுரையீரல் தொடர்பான நோய்களால் உயிரிழப்பவர்களில் பாதி பேர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரியின் சட்டத்தரணி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்ட மரண விசாரணை அதிகாரியின் சாட்சியப் பரிசோதனையில் இது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போதைப்பொருள் பாவனையினால் 3 வருடங்களில் மரணம் நேரிடலாம்!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Srilanka Drug Use People

 

ஐஸ் போதைப்பொருள் பாவனையில் நேரடியாக ஈடுபடும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 2 அல்லது 3 வருடங்களில் உயிரிழப்பார்கள் எனவும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்த முதியவர்கள் தற்போது ஐஸ் போதைப்பொருளுக்கு மாறியுள்ளமையினால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்