கொழும்பில் மீண்டும் ஆரம்பமாகும் இலகு ரயில் திட்டம்

கடன் உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் போது இலகு ரயில் சேவை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், ஜப்பானிய அரசாங்கம் இந்த திட்டத்தை மீள ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை எட்டியவுடன் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் என ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேகி ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தனவிடம் தெரிவித்தார்.

இலகுரக ரயில் திட்டம் இடைநிறுத்தப்பட்டதால் 597.8 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

 

 

பல கட்டங்களாக நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இலகு ரயில் திட்டத்தின் முதல் பாதை கொழும்பு கோட்டையிலிருந்து மாலபே வரையிலான இலகு ரயில் பாதையாகும்.

அதன் நீளம் 15.3 கிலோ மீற்றர் மற்றும் 16 நிலையங்களை உள்ளடக்கியது. இது தவிர மேலும் 6 வழித்தடங்கள் தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்