விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தது இது தான்..! கஜேந்திரகுமார் வேண்டுகோள்

விடுதலைப் புலிகள் எதிர்பார்த்த சூழல் இப்பொழுது தான் அமைந்துள்ளது. இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்படவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளுடனான கலந்துரையாடலுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அழைப்பு குறித்து நேற்று (11) யாழ்ப்பாணத்தில் நடத்திய சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் பல முறை இலங்கை பொருளாதாரத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள்.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்விற்கு முயற்சிக்கும் என்பதால் புலிகள் அப்படி செயற்பட்டார்கள்.

விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தது இது தான்..! கஜேந்திரகுமார் வேண்டுகோள் | Solution For Sri Lankan Tamil People Ltte Dream

புலிகள் எதை குறி வைத்து தாக்கினார்களோ, அது தற்போது தான் நடந்துள்ளது. இந்த சமயத்தில் தமிழ் மக்கள் தமது முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு செயற்படவேண்டும்.

பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தால் சமஷ்டி அடிப்படையிலான தீர்வைப்பற்றி அதிபர் சிங்கள மக்களிடம் பகிரங்கமாக பேச வேண்டும். அப்படி நடக்காத பட்சத்தில் தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றபடுவார்.

இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை ஒரு எல்லையை தாண்டி, எட்ட முடியாத இடத்திற்கு கொண்டு செல்லப்படும் அபாயமுள்ளது.

ரணிலின் அழைப்பை ஏற்று, நிபந்தனையின்றி பேச்சில் கலந்து கொள்ளவுள்ள தரப்புகள் தான் அதற்கு பொறுப்பேற்கவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.