அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து! விடுக்கப்பட்ட உத்தரவு

இலங்கையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளமையால் அனைத்து ஊழியர்களும் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன உத்தரவிட்டுள்ளார்.

சேவையை தடையின்றி பேணுவதற்காக இவ்வாறு விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தபால் சேவையாளர்கள் நேற்று பிற்பகல் 4 மணிமுதல் முதல் அடையாள பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றனர்.

அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து! விடுக்கப்பட்ட உத்தரவு | Postal Government Employees Leave Cancel

சில கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படும் இந்த பணிப்புறக்கணிப்பானது இன்று நள்ளிரவு 12 மணி வரை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக்க பண்டார கூறுகையில்,

தபால் சேவையினை தனியார் மயப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றமை, தனியார் ஊடாக தபால் விநியோக சேவையினை முன்னெடுப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் மற்றும் சேவையாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள 27,000இற்கும் அதிகமான தபால் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.