இலங்கையில் மீண்டும் சூறாவளி அச்சம்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் காலநிலை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வருகின்ற நாட்களில் இலங்கையின் காலநிலையில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது இலங்கையில் காற்றழுத்தத் தாழ்வு நிலை சிறிதளவு அதிகரித்து வருவதாகவும், இந்தநிலை சூறாவளியாக மாறுமா என இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும், அவ்வாறான நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

இலங்கையில் மீண்டும் சூறாவளி அச்சம்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | Future Weather Department Of Meteorology Sri Lanka

16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அந்தமான் தீவைச் சூழவுள்ள நிலைமை தற்போதும் நாட்டில் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த காலநிலை மாற்றமானது வளிமண்டலவியல் அமைப்பு மற்றும் வழித்தடத்தில் உள்ள நீராவியின் அளவைப் பொறுத்தே அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த நிலையே அண்மையில் நாட்டில் ஒரு குளிர் கால நிலைமையை தோற்றுவித்தது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.