சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நால்வர் கைது…

சட்டவிரோதமாக வீடொன்றின் பின்புறம் புதையல் தோண்டிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை(12) பொலன்னறுவை, தம்பல புலஸ்திகம பகுதியில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக அரலகங்வில விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் பல கருவிகளும் கைப்பற்றபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத புதையல் அகழ்வு - விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு | Treasure Four Diggers Arrest Sl Stf Police

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு, பாணந்துறை, பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அரலகங்வில விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி ஆர்.எம்.பி.ஜெயகெலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

“சந்தேக நபர்கள் புதையல் தோண்டுவதற்கு முன்னர், ஸ்கேனிங் இயந்திரங்களைப் பயன்படுத்தி அந்த இடத்தை சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக எமது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இரும்புக் கருவிகள், மண்வெட்டிகள், தண்ணீர் தெளிக்கும் பிளாஸ்டிக் குழாய்கள், தேங்காய் எண்ணெய் களிமண் விளக்குகள், தூபக் குச்சிகள், நூல்கள், சுண்ணாம்பு, கடல் மணல், சாம்பிராணி, தங்கம் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பல கருவிகள் உள்ளிட்ட ஏராளமான யாகப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன” என தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.