யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட தெரிவு பரீட்சையில் முறைக்கேடு; பெற்றோர்கள் கவலை!

யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் நடனத்துறைக்குப் புதிய மாணவர்களை உள்வாங்குவதற்காக இந்த தெரிவு பரீட்சை நடத்தப்படுகிறது.

புதிய மாணவர்களை உள்வாங்குவதற்கு நடத்தப்படும் குறித்த தெரிவு பரீட்சையிலே இந்த முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட தெரிவு பரீட்சையில் முறைக்கேடு; பெற்றோர்கள் கவலை! | Jaffna University Exam Issue Parents Report

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று, நுண்கலைப்பாடங்களில் விசேட திறமை உள்ளவர்களை உள்வாங்குவதற்கான தெரிவுப் பரீட்சைகள் அந்தந்த பல்கலைக்கழகங்களினால் நடத்தப்படுவது வழமையாகும்.

அவ்வாறு, யாழ். பல்கலைக்கழக நடனத் துறையினால் நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையிலேயே முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

2022 – 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளிவந்துள்ள நிலையில், திறமையான பல மாணவர்கள் நுண்கலை நடனத்துறை அனுமதியில் தெரிவு செய்யப்படாமை கண்டறியப்பட்டுள்ளது.

 

 

யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட தெரிவு பரீட்சையில் முறைக்கேடு; பெற்றோர்கள் கவலை! | Jaffna University Exam Issue Parents Report

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.

நுண்கலைப் பாட நெறிகளுக்கு பல்கலைக்கழகங்களினால் நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சைகளின் அடிப்படையிலும், மாணவர்கள் பெற்ற இசற் ஸ்கோர்(z-score) புள்ளி அடிப்படையிலும் தெரிவு இடம்பெற்றதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், பல்கலைக்கழகங்களின் தெரிவு என்பது மாணவர்கள் குறித்த பாடத்தில் வெளிப்படுத்திய அடைவு மட்டங்களின் அடிப்படையில் அமையும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மகாண மற்றும் தேசிய ரீதியிலான சாதனைகள் படைத்த மற்றும் பிரபல பாடசாலைகளின் ஆசிரியர்களிடம் பயின்ற பல மாணவர்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், நாடகத்துறை விரிவுரையாளர்களின் இத்தகைய செயற்பாடு குறித்து துணைவேந்தரை நேரடியாகச் சந்தித்து முறைப்பாடு செய்ய அனுமதி கேட்டபோது, நடனத்துறையினர் அதற்கு அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி வழங்குமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரிடமும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடுகள் தனித்தனியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.