யாழில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தால் மனித உரிமைகள் தினக் கலந்துரையாடல்.

சாவகச்சேரி நிருபர்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் 10/12 சனிக்கிழமை யாழ்ப்பாணம் கியுடெக் கரித்தாஸ் வளாக மண்டபத்தில் சர்வதேச மனித உரிமைகள் தினக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
“அனைவருக்கும் கௌரவம்,சுதந்திரம் மற்றும் நீதி” எனும் கருப்பொருளில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி அம்பிகா ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ;
அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 75ஆவது வருட நிறைவினை முன்னிட்ட விசேட உரையினை யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி துஷானி சயந்தன் ஆற்றியிருந்தார்.
மேலும் நிகழ்வில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின்  பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்,சட்டத்தரணி றொபின்சா நக்கீரன்,பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கிருஷ்ணகுமார் சத்தியப்பிரியா,சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் க.றஜீவன்,சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் செல்வி ஞா.கஜந்தா,பெண் பொலிஸ் உத்தியோகத்தர் செல்வி.க.பிரதீபா மற்றும் சமூக செயற்பாட்டாளர் செபஸ்ரியாம்பிள்ளை யோசப்பாலா ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.
மனித உரிமைகள் தின நிகழ்வில் சமூக ஆர்வலர்கள்,மாணவர்கள்,பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.